சற்குணன் என்னும் அரசன் வழிபட்டு பிறவிப் பிணியை போக்கிய தலமாதலால் 'இனி கரு இல்லை' அதாவது பிறப்பு இல்லை என்னும் கருத்தில் 'கருவிலி' என்னும் பெயர் பெற்றது. கோயில் பெயர் கொட்டிட்டை. கொடுகொட்டி என்பது சிவ நடனம். அது மருவி 'கொட்டிட்டை' என்று ஆனது.
மூலவர் 'சற்குண நாதேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், பெரிய லிங்க வடிவில் காட்சி தருகின்றார். அம்பாளும் 'சர்வாங்க நாயகி' என்னும் திருநாமத்துடன், பெரிய வடிவத்தில் அழகாக காட்சித் தருகின்றாள்.
இந்திரன், தேவர்கள், உருத்திரக் கணங்கள் ஆகியோர் வழிபட்ட தலம்.
திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|